சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஐதேகவுக்கு- மைத்திரி இணக்கம்

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவியை ஐதேகவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊடகத்துறை அமைச்சர் பதவியையும் ஐதேகவுக்கு வழங்குவதற்கும் சிறிலங்கா அதிபர் இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், ஐதேக வசமிருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சை பாதுகாப்பு அமைச்சுடன் இணைத்துக் கொண்ட சிறிலங்கா அதிபர், அதனை தன்வசம் வைத்திருக்கிறார்.

அத்துடன், ஊடகத்துறை அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்ட போதும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!