மகளுக்கு போதைமருந்து கொடுத்து கால்வாயில் தள்ளி கொன்ற தந்தை!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பராய் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெண்ணின் தந்தை விர்பால் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தனது தொடர்பை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விர்பால் தனது மகளுக்கு நேற்று போதை மருந்து கொடுத்து அங்குள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அர்ஜுன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விர்பால் மற்றும் ஒருவரை கைது செய்தனர். குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் மகளை கொலை செய்ததாக விர்பால் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். பெண்ணின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!