நைல் நதியிலிருந்து 40 பேரின் சடலங்கள் மீட்பு

சூடானின் நைல் நதிக் கரையிலிருந்து சுமார் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடான் நாட்டு தலைநகர் கார்டோமை ஊடறுத்து செல்லும் நைல் நதியிலிருந்தே குறித்த 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவை கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்களுள் 60 பேர் வரை கொல்லபட்டிருக்கலாம் என்றும் தற்போது 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சூடான் மத்திய வைத்திய குழு the Central Committee of Sudan Doctors (CCSD) தெரிவித்துள்ளது

இந்நிலையில் துணை இராணுவக் குழு Rapid Support Forces (RSF) ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக வைத்திய குழுவிடம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஆளும் இராணுவ சபை தெரிவித்துள்ளது.

சூடானில் சிவில் ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற நிலையில், அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!