முடியாத கட்டத்தில் வைத்தியரை நாடிய இளம்பெண்: மூளைப் புற்றுநோய் என்றெண்ணிய வைத்தியரை அதிரவைத்த சம்பவம்

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில், புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணின் மூளையில் நாடாப் புழுக்களை வைத்தியர்கள் கண்டெடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் மிட்டில்டவுன் பகுதியில் குடியிருந்து வருபவர் ரேச்சல் பால்மா. இவர் தூக்கமின்மை காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். 2018 ஜனவரி மாதம், இதன் தாக்கம் அதிகமாகவே, இவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி மறதி நோயும் பிடிபட்டுள்ளது. இதனால் அலுவலகத்திலும், நண்பர்களிடையேயும் அவதிப்பட்டுள்ள இவர், ஒருகட்டத்தில் தம்மால் இனி தாங்கிக்கொள்ள முடியாது என தெரிந்ததும், நியூயார்க் நகரத்தில் உள்ள மவுண்ட் சினாய் வைத்தியசாலையில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு பதிவு செய்துகொண்டார்.

முதற்கட்டத்தில் பால்மாவை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனைகளில் மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவைசிகிச்சைக்கு நாள் குறித்த வைத்தியர்கள், சிகிச்சைக்கு தயாரானார்கள்.

புற்றுநோய் கட்டி என கருதிய வைத்தியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பால்மாவின் மூளையில் காடை முட்டை அளவுக்கு ஒரு பொருள் இருந்துள்ளது. அந்த பொருளை வெளியே எடுத்த வைத்தியர்கள் நுண்ணோக்கி உதவியுடன் ஆழமாக அதை ஆராய்ந்துள்ளனர்.

முட்டை வடிவிலான அந்த பொருளை இரண்டாக பிளந்துள்ளனர். அப்போது அதில் இருந்து ஒரு குட்டி நாடாப் புழு வெளியே வந்துள்ளது.

பொதுவாக உரியமுறையில் சமைக்காத பன்றி இறைச்சியை அதிகம் உண்ணும் மக்களுக்கு நாடாப் புழுவின் தாக்கம் இருக்கும் எனவும், அல்லது கழிவறையை பயன்படுத்திவிட்டு உரியமுறையில் சுத்தம் செய்து கொள்ளாதவர்களிடமும் இந்த புழுவின் தொற்று இருக்கும் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!