செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலா : ட்ரம்ப்

செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலா என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள கருத்­தா­னது இணை­யத்தில் கிண்ட­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

அமெ­ரிக்க ஜனா­திபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்­கத்தில், “நாம் செலவு செய்யும் பணத்­துக்கு நாசா இன்­னமும் நிலா­வுக்குச் செல்லப் ­போ­வ­தாக பேசிக் கொண்­டி­ருக்கக் கூடாது.- நாம் இதை 50 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே செய்­து­விட்டோம்.

நாசா இன்னும் மிகப்­பெரும் விஷ­யங்­க­ளான செவ்வாய் (இதன் ஒரு பகு­தி­யான நிலவு) பாது­காப்பு மற்றும் அறி­வியல் மீது கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ட்ரம்ப் இந்த டுவிட்டர் பதிவை வெளி­யிடக் காரணம் நாசா நிர்வாகி ஜிம் பிரி­டன்ஸ்டைன் கடந்த வியா­ழக்­கி­ழ­மைதான் ட்ரம்ப் நிதி ஒதுக்­கீட்டை அதி­கப்­ப­டுத்­தினால் மட்டுமே 2024-ஆம் ஆண்டு நம்மால் நிலவில் கால்­வைக்க முடியும்’ எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்க வந்து கடை­சியில் செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலவு என ட்ரம்ப் கூற அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் அறிவியல் அறிவை இணை­ய­வா­சிகள் கேலி செய்து வரு­கின்­றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!