சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்கு விசேடகுழு – மத்தியவங்கி ஆளுநர்

சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்காக இலங்கை மத்தியவங்கியில் நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மத்தியவங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திவிநெகும என்ற கிராம எழுச்சி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமுர்த்திவங்கி முகாமைத்துவக்குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த குழுவில் இலங்கை மத்தியவங்கி நிதியமைச்சின் பிரதிநிதிகள் இருவர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!