பாராளுமன்ற தெரிவுக்குழு சர்ச்சையால் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் முரண்பாடுகள் : தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு கூடியமையால் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்குமானால் நாடு பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று ஸ்ரீலங்;கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

தெரிவுக்குழு உறுப்பினர்களும் சபாநாயகர் கருஜய சூரியவும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு சந்திப்பு இடம்பெறுமானால் அதனை நாம் வரவேற்கின்றோம். இந்த சந்திப்பின் மூலமாவது முரண்பாடுகளை களைந்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க தயாராகி வருகின்றமையால் அவருக்கே உரிய பொறுப்புக்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு பக்கச் சார்பாக செயற்படுகின்றார். நிலையியற் கட்டளைகளை மீறி இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.இது கவலைக்குரிய விடயமாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!