13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம்: – சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு

ஆந்தி£வில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் இந்த சிறுவனின் உறவினர் அய்யம்மாள் (23) என்பவருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

இவர்கள் 2 பேரும் உறவினர் என்பதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வரும்போது, அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வி‌ஷயம் பெற்றோர் களுக்கு தெரியவரவே, 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியதை தொடர்ந்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஏனெனில், 13 வயது சிறுவன் ‘மைனர்’ என்பது தெரிந்தும், அவனை 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அறிந்ததும், இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகி விட்டனர். இருப்பினும், மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!