கோத்தாவை எதிர்பார்க்கும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்! – பசில்

மாகாணசபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் கட்சி செயாளர்களுக்கும் , கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணைக்குவின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று தேர்தல் ஆணையகத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!