அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி ஜே. வி. பி யினருக்கு கிடையாது – பவித்ரா வன்னியராச்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்திலான அரசாங்கத்தினை விமர்சிக்கும் உரிமை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஜே. வி. பி. யினர் மக்களுக்கு அழைப்பு விடுக்க அவசியமில்லை.தேர்தலை நடத்துங்கள் உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியினர் முழு ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மோசடியானது என்றும் ஏற்படுத்தவுள்ள அரசாங்கம் சிறப்பானது என்றும் போலியான பிரச்சாரங்களை முன்வைத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினதும், அரசாங்கத்தினதும் பங்காளியாகவே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது.

அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து முறையற்ற செயற்பாடுகளுக்கும் மறைமுகமாக துணை நின்று மக்கள் மத்தியில் எதிரானவர்கள் போல் செயற்பட்டு காலத்தை கடத்தி வந்தார்கள்.

அரசாங்கத்தின் அனைத்து முறையற்ற செயற்பாடும், ஆட்சியாளர்களின் பலவீனத்தன்மையும் வெளிப்பட்டதை தொடர்ந்து தற்போது அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். ஆகவே அரசாங்கத்தை மாத்திரம் விமர்சிக்கும் தகுதி மக்கள் விடுதலை முன்னணியினருக்கு கிடையாது. என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!