2ஆம் உலகப்போர் அனுபவத்தை மறுஉருவாக்கம் செய்துள்ள இங்கிலாந்து விஞ்ஞானிகள்

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட டெலிகிராஃப் முறையை விர்சுவல் ரியாலிட்டி மூலம் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது மோர்ஸ் குறியீடு மற்றும் டெலிகிராஃப் மூலம் ரகசிய தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் அப்போது பயனப்படுத்தப்பட்ட முறையை தென்கிழக்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

போர் சமயத்தில் இருந்த டெலிகிராஃப் நிலையத்தை போன்றே இருக்கும் இந்த தொழில்நுட்பம், போர்த்கர்னோ((Porthcurno)) டெலிகிராஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2020ல் இந்த தொழில்நுட்பம் முழுமையாக தயாராகிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!