விளையாடிய போது எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் விளையாடி கொண்டிருந்த எஜமானரை எதிர்பாராதவிதமாக அவரது நாய் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் தனது வீட்டில் ‘பாலே’ என்று பெயரிடப்பட்ட செல்ல நாயை வளர்த்து வந்தார்.

‘லாப்ராடார்’ இனத்தை சேர்ந்த அந்த நாயுடன் சோபாவில் அமர்ந்தபடி இருந்தார். துள்ளிக் குதித்து விளையாடிய அந்த நாய் திடீரென அவர் இடுப்பு பெல்டில் வைத்திருந்த 9 ‘எம்.எம்.’ ரக துப்பாக்கியை பறித்தது.

எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் பிஸ்டலை இழுத்தது. அதனால் துப்பாக்கிவெடித்து ரிச்சர்ட் ரெமி உடலில் குண்டு பாய்ந்தது.

இதனால் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அவசர உதவி மையத்தின் 911 என்ற நம்பருக்கு போன் செய்தார். அப்போது எனது நாய் சுட்டுவிட்டது உதவிக்கு வாருங்கள் என அழைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!