செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா!

அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிறது. ஹெலிகாப்டரை சிறிய அளவில் வடிவமைத்து, அதன் எடையை 1.8 கிலோவாக குறைக்க வடிவமைப்பாளர்கள் குழு 4 ஆண்டுகள் உழைத்தது.

பூமியை விட 100 மடங்கு மெலிதான செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பறக்க உகந்ததாக இந்த ஹெலிகாப்டரை அவர்கள் வடிவமைத்துள்ளனர். நமது எதிர்கால அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவ போகிறது என்று நாசா நிர்வாகி ஜிம் கூறியுள்ளார். ட்ரோனுக்கு பதிலாக பறக்கவிருக்கும் சிறிய ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!