தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30ற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயம்: நைஜீரியாவில் சம்பவம்

நைஜீரியாவில் உள்ள பிரபல கால்பந்தாட்ட மைதானமொன்றில், போகோ ஹராம் தீவிரவாதிகள், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ”கொண்டுகா” என்ற நகரில், உள்ளூர் கால்பந்து போட்டியின் ஆட்டத்தை நேரடியாகப் பார்வையிட, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், மைதானத்தில் சூழ்ந்திருந்தனர். அப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி வந்த தீவிரவாதிகள் மூவர், ரசிகர்கள் நிறைந்திருந்த பகுதிக்குள் புகுந்து, தமது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

இதில், 30க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், உடல் சிதறி பலியாகியுள்ளதோடு,

இத் தாக்குதலில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குறித்த பகுதியில் அடிக்கடி, தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!