நியூசிலாந்து மசூதித் தாக்குதல் எதிரொலி ; மக்களிடம் இருந்து துப்பாக்கிகள் களைவு

நியூசிலாந்தில் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் ஆகியவற்றை பொதுமக்களிடமிருந்து அந்நாட்டு அரசாங்கம் மீளப்பெற்று வருகிறது.

நியூஸிலாந்திலுள்ள மசூதீகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து இந்நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸார், மற்றும் படையினர் இணைந்து இவ்வாறான சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மீட்கும் பணியை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பெரும்பலான பகுதிகளில் சட்டவிரோத குண்டுகள் மற்றும் துப்பாகிகள் உட்பட பல வகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!