ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்குக் காரணம் என்ன, யார் பொறுப்புக்கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கவில்லை என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ரோமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அங்கு வாழ் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு யார் தடையாக உள்ளார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மக்களில் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. அத்தீர்ப்பு உரிய நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும். மனிதனை கொன்றால் சொர்க்கம் செல்லலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நரகத்தில் கூட இடம் கிடைக்காது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இன்று மக்களின் நல்லபிப்ராயங்களை பெறவில்லை. மாறாக வெறுப்புக்களே சம்பாதித்துள்ளனர். இன்றைய நிலையில் பாராளுமன்றத்திற்கு நன்கு கல்வி தகைமையுடன் இளம் தலைமுறையினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!