மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!!

மொழி என்­பது மக்­களை ஒன்­றி­ணைக்­கும் முக்­கிய ஊட­கம் எனக் கொள்­ளப்­ப­டும். இந்த உண்மை சகல இனத்­த­வர்­க­ளுக்­கும் பொது­வா­ன­தொன்று. மனி­தர்­கள் எந்­த­வொரு மொழி­யைப் பேசு­ப­வர்­க­ளாக இருப்­பி­னும், அதன் மூலம் அவர்­கள் தமது கருத்­துக்­க­ளைப் பகிர்ந்து கொள்ள முடி­கி­றது என்­பதே யதார்த்­தம். மொழி தொடர்­பான சமூ­கத்­தின் பொது நோக்கும் அது­வே­யா­கும். ஆனால் நாக­ரீ­க­ம­டைந்த சமூ­கம் என ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு சமூ­கத்­தில் மொழி தொடர்­பான அந்­தப் பொது மதிப்பை மாற்றி யமைத்­துப் பெரும் அழி­வு­க­ளுக்கு வழி வகுத்­த­வர்­கள் மொழியை ஒரு ஆயு­த­மா­கப் பயன்­ப­டுத்­திய அர­சி­யல்­வா­தி­களே ஆவர்.

ஒரு இனத்­தின் மொழியை இனத்­தின் அடை­யா­ள­மாக ஆக்கி
அர­சி­யல் செய்­தோர்

இத்­த­கைய அழி­வு­கள் உச்­ச­நி­லை­ய­டைந்த சம்­ப­வ­மாக அமைந்­தது, மொழியை இனத்­தின் அடை­யா­ள­மாக முன்­னி­லைப்­ப­டுத்­திய அர­சி­யல், நாட்டு மக்­கள் மத்­தி­யில் உரு­வா­னதை அடுத்­தே­யா­கும். இதன் கார­ண­மா­கவே, விசே­ட­மாக இலங்கை போன்ற மூன்­றாம் உலக நாடு­கள் முகம் கொடுக்க நேர்ந்­துள்ள பலா­ப­லன்­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வது, நாட்­டின் இன்­றைய தலை­மு­றை­யி­னரே. அது­மட்­டு­மன்றி, எதிர்­கா­லப் பரம்­ப­ரை­யும் இந்­தப் பயங்­கர நிலையை அனு­ப­விக்க நேர்­வ­தைத் தடுத்­திட இய­லாது போகும். இன்­றைய கால­கட்­டத்­தில், மொழி­களை இன­வாத மோதல்­க­ளுக்­கான குறி­யீ­டா­கப் பயன்­ப­டுத்த சில தரப்­பி­னர்­கள் ஆர்­வம் காட்­டு­வ­தற்­குக் கார­ணம், முன்­னைய காலம் தொட்டு இன்­று­வரை அர­சி­ய­லும் மொழி­யு।ம் அர­சி­ய­லின் வலு­வான துரும்­பு­க­ளா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­த­னா­லேயே ஆகும்.

இலங்கை அன்­னி­யர் ஆட்­சிக்கு உட்­பட்­ட­தன் பின்­னர், ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளர்­கள் இலங்­கை­யர்­களை அவர்­க­ளது இன மற்­றும் மத அடிப்­ப­டை­யில் மலை­நாட்டு மற்­றும் கரை­யோ­ரப் பிர­தே­சத்­த­வர்­கள் என்ற ரீதி­யில் வேறு­ப­டுத்தி நிர்­வ­கித்­தமை, அத்­த­கைய நடை­முறை அவர்­க­ளது நிர்­வா­கச் செயற்­பா­டு­களை இல­கு­வாக்­கி­ய­தன் அடிப்­ப­டை­யி­லேயே ஆகும். இலங்­கை­யர்­கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டும்­வரை, தம்­மால் இலங்­கையை முறைப்­ப­டி­யா­க­ வும், இல­கு­வா­க­வும் நிர்­வ­கிக்க இய­லா­தென்­பதை அந்த வேளைய ஆங்­கி­லேய நிர்­வா­கத் தரப்­பி­னர் தௌிவாக உணர்ந்­தி­ருந்­த­னர். பிரித்­தா­ளும் தந்­தி­ரம் அவர்­க­ளது நிர்­வாக நடை­மு­றை­யின் முக்­கிய அம்­ச­மொன்­றாக கடைக்­கொள்­ளப்­பட்டு வந்­தது. 1832ஆம் ஆண்­ட­ள­வில் ‘கோல்­பு­றூக்’ என்­ப­வ­ரது பரிந்­து­ரை­க­ளின்­படி அந்த நடை­முறை மேலும் பல­மிக்க நிலையை அடைந்­தது.

பிரித்­தா­ளும் தந்­தி­ரத்­து­டன் அர­சி­யல் செய்த ஆங்­கி­லே­யர்­கள்

ஆங்­கி­லே­யர்­க­ளது நிர்­வா­கக் கட்­ட­மைப்­புக் குறித்­துத் தெரிந்து கொண்­டி­ருந்த சிங்­கள, தமிழ், முஸ்­லீம்­கள், மலே­யர்­கள் மற்­றும் பறங்­கி­யர் ஆகிய இனத்­த­வர்­க­ளது கூட்­டி­ணை­வு­டன் ஒரு அர­சி­யல் அமைப்பு என்ற ரீதி­யில் 1918ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதத்­தில் இலங்கை தேசிய சங்­கம் என்ற பெய­ரில் ஒரு அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

சாத்­வீக வழி­யில் நாட்­டுக்­குச் சுதந்­தி­ரம் ஈட்­டிக் கொள்­வதே இந்த அமைப்­பின் முக்­கிய கொள்­கை­யாக அமைந்­தது. ஆனால் இந்த ஒன்­றி­ணைவு நீண்ட காலத்­துக்கு நிலைக்­க­வில்லை. 1921ஆம் ஆண்­டில் பொன்­னம்­ப­லம் அரு­ணா­ச­லம், இலங்கை தேசிய சங்­கத்­தி­லி­ருந்து வௌியேறி, தமி­ழர் மகா­சபை என்ற பெய­ரில் தமிழ் இனத்­த­வர்­க­ளுக்­காக தனி­யான அமைப்­பொன்றை நிறு­வி­னார்.

அதே சம­யம் இலங்கை தேசிய சங்­கத்­தின் இணைச் செய­லா­ளர்­க­ளில் ஒரு­வ­ரா­கச் செயற்­பட்டு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­ய­கா­வும் இலங்கை தேசிய சங்­கத்­தி­னின்­றும் வௌியேறி, 1934ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிங்­கள மகா­சபை என்ற பெய­ரில் அமைப்­பொன்றை நிறு­வி­னார். சிங்­கள மக்­க­ளது ஆத­ரவை ஈட்­டிக் கொள்­ளும் நோக்­கில் குறித்த சிங்­கள மகா­சபை அமைக்­கப்­பட்­டது.

அதே­வேளை அந்தவேளை­யில் இலங்­கை­யில் வாழ்ந்து வந்த கேர்­ணல் டி.வை.றைற் என்ற ஐரோப்­பிய இனத்­த­வ­ரது தலை­மை­யி­லான ஐரோப்­பிய சங்­கத்­தில் நாட்­டின் ஐரோப்­பிய இனத்­த­வர்­கள் இணைந்து கொண்­ட­னர். இலங்­கை­யி­லி­ருந்து மலா­யர் மற்­றும் முஸ்­லீம் இனத்­த­வர்­கள் ரி.பி.ஜயா­வின் தலை­மை­யில் ஒன்­றி­ணைத்­தி­ருந்­த­னர். மேற்­கு­றிப்­பிட்ட அமைப்­புக்­க­ளது அடிப்­ப­டைக் கொள்கை, ஒவ்­வொரு இனத்­த­வர்­க­ளுக்­கும் அந்­தந்த இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் தலை­மை­தாங்க வேண்­டும் என்ற விதத்­தில் அமைந்­தி­ருந்­தது.

1943ஆம் ஆண்­டில் அரச நிர்­ணய சபை­யில் கள­னித்­தொ­குதி உறுப்­பி­னர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, சிங்­கள மொழியை அரச கரும மொழி­யாக அறி­விக்­கப்­பட வேண்­டு­மெ­னப் பிரே­ர­ணை­யொன்றை முன்­வைத்­தார். அது நாட்­டின் தேசிய ஒற்­று­மைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­த­லாம் எனக்­க­ருதி, பின்­னர் தமிழ் மொழி­யை­யும் அதில் இணைத்­துக் கொள்­வ­தற்­கான திருத்­த­மொன்­றை­யும் ஜே.ஆர் அந்­தப் பிரே­ர­ணை­யில் உள்­ள­டக்­கி­யி­ருந்­தார்.

இன­வாத அடிப்­ப­டை­யில்தோற்­றம் பெற்ற அர­சி­யல் கட்­சி­கள்

1944ஆம் ஆண்­ட­ள­வில் இன­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்­திய அர­சி­யல் கட்­சி­கள் குறிப்­பாக, வட­ப­கு­தியை முன்­னி­லைப்­ப­டுத்தி தோற்­றம் பெற்­றன. ஈழத் தமிழ் மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப ­டுத்­திய அர­சி­யல் தலை­மை­க­ளாக ஏற்­கப்­பட்ட ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லம் மற்­றும் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம் ஆகிய இரு­வ­ரும் இணைந்து அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சியை உரு­வாக்­கி­னர். தாம் நாட்­டின் வட­ப­கு­தித் தமிழ் மக்­க­ளுக்­கா­கவே காங்­கி­ரஸ் கட்­சியை உரு­வாக்­கி­ய­தாக சோல்­பரி ஆணைக்­கு­ழு­முன் னிலை­யில் ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லம் சாட்­சி­ய­ளித்­த­தன் மூலம் இது வௌிப்­ப­டுத்­தப்­பட்­டது.

அர­ச­மைப்­புப் புன­ர­மைப்­பின் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு ஐம்­ப­துக்கு ஐம்­பது பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லத்­தின் முக்­கிய கோரிக்­கை­யாக ஆணைக்­குழு முன்­னி­லை­யில் முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அத­னைச் சோல்­பரி ஆணைக்­குழு நிரா­க­ரித்­த­தை­ய­டுத்து ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லத்­தின் அந்த ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்கை செய­லி­ழந்து போயிற்று. இதன்­மூ­லம் தாம் பய­ன­டை­யத் திட்­ட­மிட்ட, அர­சி­யல் சூட்­சு­மம் கைவ­ரப்­பெற்ற முத­லா­வது தலைமை அமைச்­ச­ரான டீ.எஸ்.சேன­நா­யக, ஏதோ வகை­யில் ஜீ.ஜீ. பொன்­னம்­ப­லத்­தின் நிலைப்­பாட்டை மாற்­று­வித்து, அவ­ரைத் தமது அமைச்­ச­ர­வை­யில் இணைத்­துக் கொண்­ட­தன் மூலம் ஜீ.ஜீ. பொன்­னம்­ப­லத்­தின் ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்­கையை சூட்­சு­ம­மான விதத்­தில் கைவி­டச் செய்­வ­தில் வெற்­றி­கண்­டார்.

மீண்­டும் இலங்கை அர­சி­ய­லில் மொழி என்­பதை ஒரு ஆயு­த­மாக இணைத்­த­வர் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம் ஆவார். தமிழ் மொழி­யை­யும் அர­ச­க­ரும மொழி­யாக்­கும் பிரச்­சி­னையை முன்­வைத்து தமி­ழர் மகா­ச­பை­யி­லி­ருந்து வௌியே­றிய செல்­வ­நா­ய­கம், 1949ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 18ஆம் திக­தி­யன்று சமஷ்­டிக்­கட்­சியை ஆரம்­பித்­த­தன் பின்­னர் அதனை மேலும் பலப்­ப­டுத்­தும் விதத்­தில் தமி­ழர் ஐக்­கிய விடு­தலை முன்­னணி என்ற பெய­ரில் இன­வாத அர­சி­யல் கட்­சி­யாக அதனை உரு­வாக்­கி­னார். அதற்­குப் பின்­ன­ரான கால­கட்­டத்­தில் தமிழ் மொழியை முன்­னி­லைப்­ப­டுத்தி நாட்­டின் வட­ப­குதி முழு­வ­தி­லும் இன­வா­தப் பரப்­பு­ரை­களை அந்­தக் கட்சி முன்­னெ­டுத்­தது. ஒரு சில அர­சி­யல் விமர்­ச­கர்­க­ளது கருத்­துப்­படி தமி­ழீ­ழக் கோரிக்­கை­யி।ன் ஆரம்­ப­கர்த்­தா­வாக செல்­வ­நா­ய­கமே விளங்­கி­னார்.

சிங்­கள மொழியை முன்­னி­றுத்தி அர­சி­யல் செய்த சிங்­கள அர­சி­யல் வாதி­கள்

1956ஆம் ஆண்­டில் சிங்­கள மொழியே தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளது அர­சி­யல் பிர­பல்­யம் தேடிக்­கொள்­வ­தற்­கான துருப்­புச் சீட்­டாக அமைந்­தது. அந்த வேளை­யில் ஐ.தே.கட்­சி­யி­னின்­றும் வௌியே­றி­யி­ருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக, தம்­மால் உரு­வாக்­கப்­பட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் வரு­டாந்த மாநாட்­டில் சிங்­க­ள­மொ­ழியே நாட்­டின் அர­ச­க­ரும மொழி­யென்ற பிரே­ர­ணையை நிறை­வேற்­றிக் கொண்­ட­து­டன், ஐ.தே.கட்­சி­யும் அது­வரை அர­ச­க­ரும மொழி குறித்­துத் தான் கொண்­டி­ருந்த கொள்கை நிலைப்­பாட்­டு க்கு முர­ணான வகை­யில், சிங்­க­ளம் மட்­டுமே அர­ச­க­ரு­ம­மொ­ழி­யென்ற கொள்கை நிலைப்­பாட்­டுக்­குத் தன்னை மாற்­றிக் கொண்­டது.

1956ஆம் ஆண்­டுப் பொதுத்­தேர்­த­லில் தமது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஈட்­டிய வெற்­றி­யை­ய­டுத்து அரசை நிறு­விய பண்­டா­ர­நா­யக, 1956ஆண்டு ஜீன்­மா­தம் 15ஆம் திக­தி­யன்று சிங்­க­ளம் மட்­டுமே இலங்­கை­யின் அர­ச­க­ரு­ம­மொழி என்ற சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றிக் கொண்­டார். அத­னை­ய­டுத்து நாட்­டில் உரு­வான இனங்­க­ளுக்கு இடை­யே­யான இன­வா­தக் குழப்­பங்­கள் நாட்­டின் சகல இன மக்­கள் மத்­தி­யி­லும் அமை­தி­யின்­மை­யைத் தோற்­று­வித்­தது. அது­மட்­டு­மன்றி, பண்­டா­ர­நா­ய­க­வின் அமைச்­ச­ர­வை­யில் ஒரு தமி­ழ­ரா­வது அமைச்­ச­ராக நிய­ மிக்­கப்­ப­டாமை சிறு­பான்மை இன மக்­க­ளது மன­தில் சந்­தே­கத்தை உரு­வாக்­கக் கார­ண­மா­கி­யது.

சிங்­கள மொழியை அர­ச­க­ரும மொழி­யா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­ தை­யொட்டி நாட்­டில் தலை­தூக்­கிய குழப்­பங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க இய­லாத நிலை­யில் குறித்த சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை ஓராண்டு காலத்­துக்­குப் பின்­போ­டு­வ­தாக பண்­டா­ர­நா­யக்க அறி­வித்­தார். அதே­வேளை வாக­னங்­க­ளுக்கு சிங்­கள ஸ்ரீ எழுத்­தைப் பொறிப்­பது தொடர்­பான அர­சின் முடி­வுக்கு எதி­ரான குழப்­பங்­கள் உச்­ச­ம­டைந்த தமிழ்ப்­ப­கு­தி­க­ளில் சிங்­கள எழுத்­துக்­கள் மீது தார்­பூ­சிச் சேதப்­ப­டுத்­து­வ­தும், சிங்­க­ளப் பிர­தே­சங்­க­ளில் தமிழ் எழுத்­துக்­கள் மீது தார்­பூ­சிச் சேதப்­ப­டுத்­து­வ­து­மென குழப்­பங்­கள் மோதல்­க­ளாக உரு­மா­றின.

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் தமிழ்த் தலை­மை­கள்
செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­கள் பய­னே­தும் விளை­விக்­க­வில்லை

நாட­ளா­விய ரீதி­யில் தீவி­ர­மாக நில­விய மொழிப்­பி­ரச்­சி­னையை முன்­னிட்டு இடம்­பெற்ற மோதல்­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்­காக, தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக 1957 ஜூலை, ஆகஸ்ட் மாதங்­க­ளில் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கத்­து­டன் பேச்­சுக்­களை ஆரம்­பித்­தார். அவற்­றின் பல­னாக இனங்­கள் மத்­தி­யில் புரிந்­து­ணர்­வை­யும், நட்­பு­ற­வை­யும் பேணிக்­காக்­கும் விதத்­தில் குறிப்­பிட்ட இரு தலை­வர்­கள் மத்­தி­யி­லும் உடன்­ப­டிக்­கை­யொன்று கைச்­சாத்­தா­னது.

ஆயி­னும் அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து பௌத்த துற­வி­மா­ரும் சிங்­க­ளக் கடுங்­கோட்­பாட்­டா­ளர்­கள் தரப்­பும் ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­ட­தால், கடை­சி­யில் தலைமை அமைச்­சர் பண்­டாரநாயக குறித்த ஒப்­பந்­தத்­தைக் கிழித்­தெ­றிந்து அத­னைத் தாம் கைவிட்­டு­விட்­ட­தாக அறி­விக்­க­வேண்டி ஏற்­பட்­டது. அதன்­மூ­லம் ஆரம்­பத்­தி­லேயே தீர்த்­து­வி­டக் கூடி­ய­தா­யி­ருந்த இனப்­பி­ரச்­சினைச் சிக்­கலை மென்­மே­லும் வளர்ச்­சி­ய­டைய அனு­ம­திக்­கும் பின்­ன­ணியை உரு­வாக்­கிக் கொள்ள நேர்ந்­தது.

அந்தச் சந்தர்ப்பத்தை வாய்ப்­பா­கக் கருதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன உள்­ளிட்ட ஐ.தே.கட்­சித் தலை­வர்­கள் பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து கண்­டிக்­குப் பாதை­யாத்­தி­ரையை மேற்­கொள்­ளும் திட்­டத்­தைச் செயற்­ப­டுத்­தி­னர். உண்­மை­யில் அது மொழியை அர­சி­யல் ஆயு­த­மா­கக் கொண்டு அர­சி­யல் பிர­பல்­யம் தேடிக்­கொள்­ளும் குறுக்­கு­வழி உபா­ய­மா­கக் கொள்­ளத்­தக்­கதே. பின்­னர் ஒரு சந்­தர்ப்­பத்­தில் தாம் மேற்­கொண்ட அர­சி­யல் செயற்­பா­டு­கள் தவ­றா­னவை என்­பதை ஜே.ஆர் உணர்ந்து கொண்­டார். 1987ஆம் ஆண்­டில் இந்­திய – இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தா­ன­தன் பின்­னர் இடம்­பெற்ற உள்­நாட்டு, வௌிநாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பில் அவ்­வே­ளைய அரச தலை­வர் ஜே.ஆர், இலங்­கை­யில் இனப்­பி­ரச்­சினை உரு­வா­வ­தற்­குத் தாமும் ஒரு கார­ண­கர்த்தா என்­பதை ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்.

தொடர்ந்­தும் இடம்­பெற்ற இனப்­பி­ரச்­சினை தொடர்­பான சிக்­கல்­கள், மோதல்­க­ளுக்கு ஒரு முடிவு காணும் நோக்­கில் 1965ஆம் ஆண்­டில் அவ்­வே­ளை­யில் தலைமை அமைச்­சர் டட்லி சேன­நா­யக மற்­றும் செல்­வ­நா­ய­கம் ஆகி­யோ­ருக்­கி­டையே மீண்­டும் ஒரு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆயி­னும் அந்த வேளை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வி­யா­க­வி­ருந்த சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக தலை­மை­யில் பௌத்த துற­வி­கள் மற்­றும் சிங்­கள கடுங்­கோட்­பாட்­டா­ளர்­கள் என்­போ­ரும் இணைந்து டட்லி – செல்வா ஒப்­பந்­தத்­துக்கு எதி­ராக மேற்­கொண்ட எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக மீண்­டும் மொழி­கள் அர­சி­ய­லின் துருப்­புச் சீட்­டாக ஆகி, முடி­வில்­லாத பிரச்­சி­னை­யொன்றை நாட்டு மக்­கள் தலை­மீது சுமத்தி வைத்­தன.

1987ஆம் ஆண்­டில் இந்த நாட்­டின் மொழிப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­பதை முன்­னி­லைப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட ராஜீவ் – ஜே.ஆர் ஒப்­பந்­த­மென்ற இந்­திய– இலங்கை ஒப்­பந்­தத்தை வழக்­கம் போன்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஜே.வி.பி போன்ற அர­சி­யல் கட்­சி­கள் எதிர்க்க முயன்­றன. குறித்த ஒப்­பந்­தத்­தின் முக்­கி­ய­மா­ன­தொரு அம்­ச­மான மாகா­ண­ச­பை­களை உரு­வாக்­கு­வ­தைக் கடு­மை­யாக எதிர்த்த அந்­தத்­த­ரப்­பி­னர்­கள், முத­லா­வ­தாக இடம்­பெற்ற மாகாண சபை­ க­ளுக்­கான தேர்­த­லைப் புறக்­க­ணித்­த­ னர். பின்­னர் தமது அத்­த­கைய புறக்­க­ணிப்­பைக் கைவிட்டு, அதன் பின்­ன­ரான மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளில் அந்­தத்­த­ரப்­பி­னர்­கள் பங்­கெ­டுத்­துக் கொண்­ட­னர்.

மொழியை அர­சி­ய­லின் சம்­மட்­டி­யாக ஆக்­கிக் கொண்ட எமது நாட்­டின் அர­சி­யல் வர­லாற்­றின் உள்­ளீடு இவை­யே­யா­யி­னும், மொழி­யைத் தமது அர­சி­யல் இருப்பை உறுதி செய்து கொள்­ள­வும், அர­சி­யல் பிர­பல்­யம் தேடிக் கொள்­ள­வும் பயன்­ப­டுத்­தும் அர­சி­யல்­வா­தி­கள் பல­பேர் இன்­றும் எம்­மத்­தி­யில் உள்­ள­னர். மொழியை முன்­னி­றுத்தி இன­வா­தத்தை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தன் மூலம் அர­சி­ய­ல­ரங்­கில் தத்­த­மது அதி­கா­ரங்­களை மென்­மே­லும் வலுப்­ப­டுத்­திக் கொள்­வதே இத்­த­கைய அர­சி­யல்­வா­தி­க­ளது எதிர்­பார்ப்­பா­கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!