மரணதண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரே நாளில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தவர்களில் கல்வி அமைச்சின் முன்னாள் செயலர் கலாநிதி தாரா டி மெல்லும் அடங்குகிறார்.

மரணதண்டனை நடைமுறைப்படுத்துவது, அரசியலமைப்பில் நிறுவப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் ஆணையில் சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டதை அடுத்து, மரணதண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு மீது நாளை விசாரணை இடம்பெறவுள்ள நிலையில் உச்சநீதிமன்றில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!