பங்களாதேஸ் அணித்தலைவரை விமர்சித்த மருத்துவரிற்கு வழங்கப்பட்ட தண்டனை

பங்களாதேஸ் அணியின் தலைவர் மஸ்ரவி மோர்ட்டசாவை முகநூலில் விமர்சித்தமைக்காக தான் கிராமமொன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பங்களாதேசின் பிரபல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ரெசாவுல் ஹரீம் என்ற புற்றுநோய் மருத்துவரே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நான் புற்றுநோய் கிசிச்சை வசதிகள் இல்லாத ரங்கமட்டி மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன் இது வழமைக்கு மாறான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்

பங்களாதேஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அணியின் தலைவருமான மஸ்ரபி மோர்ட்டாசா அரச மருத்துவமனைக் சென்று அங்கு மருத்துவர்கள் எவரும் இல்லாததால் கடும் சீற்றமடைந்து அங்கு காணப்பட்ட மருத்துவர் ஒருவரை கடுமையாக சாடிய சம்பவமே இந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

மோர்ட்டாசா மருத்துவர் ஒருவரை கடுமையாக சாடும் வீடியோவொன்று வெளியாகியிருந்தது.

இதனை வைத்தியர் கரீம் உட்பட ஆறு மருத்துவர்கள் முகநூலில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.இதனை தொடர்ந்தே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவர் இடமாற்றப்பட்டுள்ளார் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!