“ஜனாதிபதியாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கே சிலருக்கு இலங்கை குடியுரிமை”

இரட்டை பிராஜா உரிமையையும் வெளிநாட்டு சிகிச்சையையும் பெற்றுக்கொள்பவர்கள் ஜனாதிபதியாக வந்து அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக மாத்திரம் இலங்கை குடியுரிமையை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள் எனத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, இவர்களின் இதுபோன்ற செயற்பாடுகளினூடாக மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் எங்களின் அரசாங்கத்தை ஒப்பிட வேண்டாம். எங்களின் கொள்கைகள் வேறுப்பட்டவை. 2015 இல் மக்களுக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய அரசாங்கமே தடையாக இருந்தது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் உருவாகி கடந்த ஆறு மாதங்களில் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மொரட்டுவை பிரதேசத்தில் 1325 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!