லஞ்ச ஒழிப்புத்துறையினரைக் கண்டு பயந்து பணத்தை விழுங்கிய நீதிமன்ற ஊழியர்!

மஹாராஷ்டிராவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கண்டதும் ஆயிரத்து 500 ரூபாயை விழுங்கிய நீதிமன்ற ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார். சிவாஜிநகர் அமர்வு நீதிமன்றத்தில் 30 வயதான ஒருவர் தனக்கு எதிராக தனது அண்ணன் தொடுத்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை வாங்கச் சென்றார். பலமுறை அலைக்கழித்த 50 வயதான ஊழியர் பிரசன்னகுமார் பகவத், இலவசமாக தர வேண்டிய நகலுக்கு ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சமாகக் கோரினார்.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்து ரசாயனம் தடவிய மூன்று 500 ரூபாய் தாள்களை 5-ம் நுழைவாயிலில் வைத்து அவர் பெற்றுக் கொண்டார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தன்னை அணுகுவதை உணர்ந்ததும் பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கத் திட்டமிட்டார்.

உடனடியாக சுதாரித்த அதிகாரிகள், கிளெர்க்கை குனியவைத்து அவரது மூக்கை அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பின் மிரட்டலின் பேரில் பணத்தை வெளியே எடுத்ததும் அதை சாட்சியாக கவரில் பெற்றுக் கொண்டனர். உமிழ்நீருடன் கூடிய ரசாயனம் தடவிய லஞ்சப்பணம், இவர்தான் பணம் வாங்கினார் என்ற ஆதாரத்தை பலமாக்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!