சித்தராமையா படாமி தொகுதியில் வெற்றி – சாமுண்டீஸ்வரியில் தோல்வி

கர்நாடக தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல் மந்திரி சித்தராமையா படாமி தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாமுண்டீஸ்வரியில் படுதோல்வி அடைந்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, படாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடா என்பவரிடம் 36 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையா படுதோல்வியை சந்தித்தார்.

அதேவேளையில், படாமி தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பிம்மப்பா-வை விட 1696 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!