டிரம்பின் மனைவி -மருத்துவமனையில்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் , சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியாகக் கருதப்பட்டு வருகிறார் மெலானியா.

இது தொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!