எபோலா தொடர்­பில் அவ­தா­னம் அவ­சி­யம்!!

எபோலா வைரஸ் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அடுத்து மிக­வும் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்று உலக நாடு­களை எச்­ச­ரித்­தது உலக சுகா­தார நிறு­வ­னம்.

மேற்கு ஆப்­பி­ரிக்க நாடு­க­ளில் 2013ஆம் ஆண்டு ‘எபோலா’ நோய் பர­வி­யது. முத­லில் கினியா நாட்­டில் பர­விய நோய் பின்­னர் சியாரா லியோன், லைபி­ரியா, காங்கோ குடி­ய­ரசு உள்­ளிட்ட நாடு­க­ளி­லும் பர­வி­யது.

2016ஆம் ஆண்டு வரை இந்த நோய் தொடர்ந்து பரவி வந்­தது. 28 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 11 ஆயி­ரத்து 310 பேர் உயி­ரி­ழந்­த­னர். 2016ஆம் ஆண்டு பிற்ப­கு­தி­யில் எபோலா ஓர­ளவு கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

ஆனால் காங்­கோ­வில் ஏபோ­லா­வின் தாக்­கம் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் மீண்டும் அவ­தா­னிக்­கப்­பட்­டது. காங்­கோ­வில் அண்­மை­யில் மர்­மச் சாவ­டைந்த 36 பேரில் 18 பேர் எபோ­லா­வால் உயி­ரி­ழந்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து ஆரம்­பத்­தி­லேயே நோயைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர உலக சுகா­தார நிறு­வ­னம் கடும் முனைப்­புக்­காட்டி வரு­கி­றது. இதை­ய­டுத்தே இந்த நோய் குறித்து கடும் எச்­ச­ரிக்­கை­யாய் இருக்க வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!