குமுதினிப் படுகொலையின் ஞாபகப்பதிவுகள்!!

33 ஆண்­டு­க­ளின் முன்­னர் இதே நாளில் அர­ச­ப­டை­கள் நிகழ்த்­திய கோரத்­தாண்­ட­வம். யாழ்ப்­பா­ணக் குடா­வின் நிலப் பரப்­பி­லி­ருந்து நீண்ட தூரத்தே நீண்ட நெடும் பரப்­பாய் நிமிர்ந்து நிற்­பது நெடுந்­தீவு.

ஆழக்­க­ட­லின் அதி­கா­ரத் தோர­ணை­க­ளுக்­கும், இயற்­கை­யின் இறு­மாப்­புக்­க­ளுக்­கும் இசைந்து போகா­மல் தனக்கே உரித்­தான கம்­பீ­ரத்­து­டன் கல்­வே­லி­க­ளும் பனை, தென்னை, பூவ­ரசு, ஈச்­ச­ம­ரங்­கள் என அழகு செய்ய, நாற்­பு­ற­மும் காவற் தெய்­வங்களின் கண்­கா­ணிப்­பு­டன் தனித்­து­வ­மாய் நிற்­கி­றது அது.

நீண்ட கடல் வெளி­யால் பிரிக்­கப்­பட்டு பய­ணத்­துக்­காக பட­கு­களை நம்­பிக் காத்­துக்­கி­டப்­பி­னும், எம்­ம­வ­ரின் சிந்­த­னை­க­ளும் செயல் வடி­வங்­க­ளும் ஓங்கி ஒலித்த படி­தான் என்­றும் இருக்­கும். ஆழிப் பேரலை­யால் கூட அசைக்க முடி­யா­மற் போன எம் சொந்­தங்­கள் மீது 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மிகப்­பெ­ரிய வர­லாற்­றுக் கொடுமை நிகழ்த்­தப்­பட்­டது. அது கேட்டு நெடுந்­தீ­வின் குடி­மக்­கள் மட்­டு­மன்றி உல­கமே ஒரு கணம் உறைந்து போனது. அன்­றைய விடு­தலை வேட்கை வீறு கொண்டு வியா­பித்து வளர வழ்­வ­குத்த வர­லாற்­றுச் சம்­ப­வ­மா­க­வும் அது அமைந்­த­தெ­ன­லாம்.

சாதா­ரண பய­ணம்
அரச பணி­யா­ளர்­கள், பெரி­ய­வர்­கள், வியா­பா­ரி­கள், குழந்­தை­கள், பெண்­கள் என அறு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் நாளாந்த கட­மை­க­ளின் பொருட்டு அன்­றும் தமது பய­ணத்தைக் குமு­தி­னிப் படகு மூலம் மேற்­கொண்­ட­னர். கட­லன்னை தாலாட்ட குமு­தி­னி­யார் நீரைக்­கி­ழித்து அசைந்­தா­டிச் செல்­லும் அந்த ஒரு மணித்­தி­யா­ல­ய­மும் மன­துக்கு மகிழ்வு தரும் பய­ணம்­தான். திரும்­பி­வ­ரும் போது மட்­டும் வைகாசி, ஆனி மாதங்­க­ளில் சிறு அசௌ­க­ரி­யங்­க­ளைப் பொறுத்­துக்­கொள்ள வேண்­டி­ய­தா­யி­ருக்­கும். மன மகிழ்­வோடு புறப்­பட்ட பய­ணி­க­ளுக்கு பய­ணத்­தின் இடை­ந­டு­வில் இடி விழு­மென எவர் தான் எண்­ணி­யி­ருப்­பர்?

கடற்­ப­டை­யி­ன­ரால் படகு நிறுத்­தப்­பட்­டது. சிறி­ய­ ப­ட­கில் வந்­த­வர்­கள் குமு­தி­னி­யில் ஏறிக் கொள்ள வழ­மை­யான வெருட்­டும், அச்­சு­றுத்­தும் செயற்­பா­டு­தான் என எண்­ணி­ய­வர்­க­ளாய் பய­ணி­கள் பட­கி­னுள் மன­துக்­குள் ஒரு அச்ச உணர்­வு­டன் காணப்­பட்­ட­னர். உங்­க­ளை­யெல்­லாம் சோதனை இட வேண்­டும் எனக் கூறி எல்­லோ­ரை­யும் ஒரு­சேர பட­கின் பின்­பக்­க அறைக்­குள் அனுப்பி விட்டு, பின்­னர் ஒவ்­வொ­ரு­வ­ராய் முன் அறைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு கத்தி, கோடாரி, கொட்­டன்­கள் என்­ப­வற்­றால் வெட்­டி­யும், கொத்­தி­யும் சித்­தி­ர­வதை செய்­தும் படு­கொலை செய்­தமை என்பன கடந்து போனவை.

கட­மையே கண்­ணென வாழ்ந்து காட்­டிய அதி­பர் திரு­மதி பிர­தானி வேலுப்­பிள்ளை, ஆசி­ரி­யர்.சதா­சி­வம் குமு­தி­னி­யின் பிர­தானி தேவ­ச­கா­யம்­பிள்ளை, ஊழி­யர்­க­ளான ந.கந்­தையா, ச.கோவிந்­தன் மற்­றும் க.கார்த்­தி­கேசு என பல அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­டன் பெரி­ய­வர்­கள் குழந்­தை­கள் கர்ப்­பி­ணிப் பெண் உட்­பட ஈவி­ரக்­க­மின்றி பல­ரும் குத்­தி­யும் வெட்­டி­யும் குத­றப்­பட்­ட­னர். குருதி வெள்­ளத்­தில் தத்­த­ளித்த இவர்­க­ளில் முப்­பத்­தாறு பேர் (36) கடற்­ப­டை­யி­ன­ரது கொலை­வெ­றிக்கு இரை­யாகி உயி­ரி­ழந்­த­னர். ஏனை­ய­வர்­கள் உயிர் ­தப்­பி­னா­லும் நீண்­ட­கால நோயா­ளி­க­ளா­கவே அவர்­க­ளால் வாழ முடிந்­தது.

சிங்­கள இன­வாத அர­சி­ய­லின் கொடூ­ர­மு­க­மும் கோழைத்­த­ன­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட இந்த சம்­ப­வம் தமிழ் இன விடி­ய­லுக்­காக இளை­ஞர்­களை வீறு­கொள்ள வைத்த வர­லாற்­றுத் தடங்­க­ளில் முதன்­மை­யான தென­லாம். சுமூ­க­ மான சூழ்நிலை நில­வும் போது குடும்ப உற­வு­க­ளோடு இணைந்­தி­ருக்க வேண்­டி­ய­வர்­கள் இன்று இல்லை என்­பதை எண்­ணிப்­பார்க்­கை­யில் இது எத்­தனை கொடு­மை­யா­னது என்­பது புரி­யும்.

வெட்­டு­வ­தும் கொத்­து­வ­தும் வேரோடு சாய்ப்­ப­து­வும் சிங்­கள இன­வாத சக்­தி­க­ளுக்கு ஒன்­றும் புதி­ய­தல்ல. குமு­தி­னி­யில் மட்­டு­மல்­லாது குரு­ந­க­ரி­லும் இதே வெறி­யாட்­டம் இடம்­பெற்­றதை இலே­சில் மறந்து விட இய­லுமா?

கவி­ஞர்­கள் பார்­வை­யில் குமு­தினி
சம­கால கவி­ஞர்­க­ளால் குமு­தி­னிப்­ப­டு­கொலை கவி­வ­ரி­க­ளில் வெளிக்­கொண்டு வரப்­பட்­டன. கவி­ஞர் புது­வை ­ரத்­தி­னத்­துரை ‘’குமு­தி­னிப் பட­கில் யார் வெட்­டி­னார்­கள்…. குரு நகர் கட­லில் ஏன் கொத்­தி­னார்­கள்… என்றும், நயி­னைக்­கவி குலத்­தின் ‘’கார்த்­தி­கேசு என்­ன­வா­னான்….’’என்று நீளும் கவி அவ­ல­மும் புங்கை நகர் கவிக்கோ சு.வில்­வ­ரத்­தி­னத்­தின் காலத்­து­யர் கவி­தை­யூ­டாக

‘’முட்­டை­களை வெட்ட ஏந்­திய வாள்­கள் மலர்­களை, தளிர்­களை, பிஞ்­சு­களை கனிய நின்ற தோப்­பு­களை, என்ற வரி­க­ளும் குமு­தி­னிப் பட­கில் பேரி­ன­வாத கடற்­ப­டை­யி­ன­ரது கத்­திக்­கும் கோடா­ரிக்­கும் வாளுக்­கும் இரை­யாகி அவ­ல­மாக உயிர் நீத்த உறவு­க­ளின் நினைவை மனக்­கண்­முன் நிறுத்­து­கின்­றன.­ வெட்டி எறிந்த குரு­திக்­காட்­டில் எது பூக்­கும்? என்ற ஏக்­க­மும் என்­றும் எம் தீவு மக்­க­ளின் நாடித்­து­டிப்­பின் அடை­யா­ளங்­க­ளாய் நீண்டு செல்­லும்.

திருப்­பு­முனை நோக்கி
செல்­ல­ரித்­துப் போன தேச கட்­டு­மா­னங்­க­ளில் எம்­ம­வ­ரின் இழப்­புக்­கள் நிலை­யா­னவை. இன­வாத அர­சு­களை ஆட்­டங்­காண வைத்த வர­லாற்­றுப் பதி­வு­க­ளில் ஒரு முக்­கிய திருப்பு முனை. ஈழ விடு­தலை வர­லாற்­றில் என்றும் ஈரம் காயாத வரி­க­ளாய் நிலைத்து நிற்­பது குமு­தி­னிப் படு கொலை. அன்று அரச படை­க­ளின் கோரத் தாண்­ட­வத்­தால் குத­றப்­பட்­டோரை ஒன்­று­பட்ட ‘’இளை­ஞர் அணி­க­ளும்’’ பொது மக்­க­ளும் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­தால் அனே­க­மா­னோர் காப்­பாற்­றப்பட்டுள்ளனர்.

நினைவு தின­மும் நினை­வா­ல­ய­மும்
இறந்­தோ­ரின் நினை­வாக சமய வழி­பா­டு­க­ளு­டன் ஊர்­வ­லங்­க­ளும் நினை­வுக் கூட்­டங்­க­ளும் நடத்­தப்­பட்­டன. ‘’இளம் பற­வை­கள் கலா­மன்­றம்’ எனும் அமைப்பு நினை­வா­ல­யம் அமைப்­ப­தற்­கான முதல் முயற்­சியை செய்­தி­ருந்­தது. காலப் போக்­கில் பிர­ஜை­கள் குழு, பிர­தே­ச­சபை போன்­றவை தற்­போ­தைய நினை­வா­ல­யம் வரை­யான ஆக்­க­பூர்வ பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தன என­லாம். குமு­ தி­னிப்­ப­ட­கில் அரச படை­யி­னர் ஆடிய ஊழிக் கூத்­தின் முப்­பத்து மூன்று வரு­டங்­கள்; நிறை­வ­டை­யும் இன்­றைய நாள்­வரை எம்­ம­வர் மத்­தி­யில் குமு­தினி பேசு பொரு­ளாக அமைந்­தி­ருக்­கி­றது.

குமு­தி­னி­யின் சேவை­யும், தேவை­யும்
குமு­தி­னிப்­ப­டகு இற்­றைக்கு சுமார் எண்­பது வரு­டங்­க­ளுக்கு முன் கட்­டப்­பட்­டது. இன்று வரை அது சேவை செய்து வரு­கின்­றது. இடை­யில் பழு­த­டைந்­தால் பத்­தி­ரி­கை­கள் சோக கீதம் பாடு­வ­தைக் கேட்­க­லாம். அத்­தனை முக்­கி­யத்­த­து­வம் குமு­தி­னிக்கு உண்டு.

காற்­றும் மழை­யும் வெயி­லும் கொடும் மழை­யும்
ஏற்று எமைச் சுமக்­கும் குமு­தி­னித்­தாய்
கூற்­று­வ­ரின் கூட்­டக்
கொடுங்­கத்தி வாள்­மு­னை­யில்
வீழ்ந்­தாள் கடல் முனை­யில்
உப்­பு­தி­ருங் காற்­றின் உத­வி­யு­டன் கரை­சேர
செத்­த­வ­ராய்ப் போனோம் – நாம்
அவளோ…
சாகா வர­மெ­டுத்­தாள்
மீண்­டும் எமைச்­சு­மக்க

குமு­தி­னி­யின் வயது என்­ப­தைத் தாண்­டி­யுள்­ளது. இந்­தத் துன்­பி­யல் இன்­று­டன் முப்­பத்­தி­ரண்டு ஆண்­டு­க­ளைக்­க­டந்து நிற்­கின்­றது. எமது வாழ்­வின் நெருக்­கீ­டு­க­ளை­யும், தடை­க­ளை­யும் உணர்ந்து கொள்­ளும் ஒரு நாளாக இன்­றைய நாள் அமை­யும். குமு­தி­னிக்­குள் நடந்த இந்த சோகங்­க­ளைப் போல், குமு­தி­னி­யும் பல சோகங்­களைச் சுமந்­தும் நெடுந்­தீவு மக்­களை சுமந்து கரை சேர்க்­கும் தாயாக பாரிய பொறுப்பை இன்­றும் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றாள்.
ஈர­மின்றி இறுகிப்­போன மனித மனங்­க­ளுக்கு வாழ்­வின் வலி­யை­யும், வழி­யை­யும், வனப்­புக்­க­ளை­யும் சொல்­லும் வள­மான ஆசா­னாய் இன்­றும் எம்­மு­டனே வலம் வருகிறாள் குமு­தி­னி­யாள். என்­றும் அவளே துணை என்ற நினைப்­புக்­க­ளு­ டன் எம்­ம­ வ­ரின் கடல்­வ­ழிப் பய­ணம் தொடர்­கின்­றது.

குற்­ற­வா­ளி­கள் யார்?
அன்­றைய அர­சின் கட்­ட­ளைக்கு அமைய செய்­யப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டும் இந்­தச் சரித்­திர அவ நிகழ்வு காலங்­கா­ல­மாக உற­வு­க­ளா­லும் ஊர­வ­ரா­லும் பேசப்­பட்­டா­லும் ‘’அர­சி­யல்­வா­தி­கள்’’ இன்­ன­மும் சிறு­பிள்­ளை­க­ளா­கவே இருப்­ப­தாய் எண்­ணத் தோன்­று­கின்­றது. குற்­ற­வா­ளி­யா­கக் கொள்­ளத்­தக்­க­வர்­க­ளுக்கு பாத­பூசை செய்­ப­வர்­க­ளாக எம்­ம­வர்­கள் மாறி­விட்­டார்­களே. இன ஐக்­கி­யம், மத நல்­லி­ணக்­கம் என்­ப­வற்­றின் பேரால் இந்த இழப்­புக்­க­ளை­யும் மறப்­ப­தைத் தவிர வேறு வழி என்ன இருக்­கி­றது எமக்கு? அமை­தி­யாய் அமை­திக்­காய் மௌனிப்­போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!