மும்பைக்கு ரெட் அலர்ட் பிறப்பிப்பு!

வரும் 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவின் பல இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பை மற்றும் தெற்கு கொங்கனில் அதி தீவிர கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்காட், தானே பால்கர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என கூறியுள்ளது.

உத்தரப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், சிக்கிமில் ஆங்காங்கே கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல தெற்கு உள் கர்நாடகம், இமாச்சல், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும் என்றும் கணித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!