ஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆல்ப்ஸ் மலையின் அயோஸ்டா பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சிறிய விமானத்துடன், ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டிலும் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடப்பதற்கு முன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவர் கோ ப்ரோ வகை கேமராவை வைத்திருந்ததால் அதில் பதிவான வீடியோவை இத்தாலி போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!