திருமணநிகழ்வில் ஆப்கான் சிறுவன் தற்கொலை தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் சிறுவன் ஒருவன் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் நங்ஹகர் மாநிலத்தில் திருமணநிகழ்வொன்றை இலக்குவைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆப்கான் அரச ஆதரவு படையணியொன்றின் தளபதியின் வீட்டிற்குள் நுழைந்த சிறுவன் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமண நிகழ்வு முடிந்து உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தவேளை தாக்குதல் இடம்பெற்றுள்ளது அவ்வேளை அங்கு பலர் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் போது ஆப்கான் அரச ஆதரவு படையணியொன்றின் தளபதியும் கொல்லப்ட்டுள்ளார் .

தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!