ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக்கொண்டமுன்னாள் ராணுவ வீரர் மனைவி!

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தானம். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அகல்யா (வயது 48). நேற்று இவர் சேலத்துக்கு வந்தார். பின்னர் அவர் பஸ்சில் மேட்டூர் திரும்பினார். கருமலைகூடல் குஞ்சாண்டியூரை பஸ் கடந்து சென்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அகல்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனக்குத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டார்.

இதில் அவருக்கு ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதை பார்த்த அருகில் இருந்த பயணிகள் அலறினார்கள். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். ரத்தம் சொட்டிய நிலையில் அகல்யா மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச் சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கருமலை கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அகல்யா குடும்ப பிரச்சினை காரணமாக கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. ஓடும் பஸ்சில் பெண் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!