நைஜீரியாவில் பரவி வரும் ‘சிக்கில்’ செல் நோய்!

நைஜீரியாவில் திருமணத்துக்கு துணை தேடுவோர், தங்கள் இணைகளுக்கு சிக்கில் செல் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதில் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர். நைஜீரியாவில் சிக்கில் செல் எனப்படும் ரத்த அணு சார்ந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வகை பாதிப்புக்குள்ளானவர்களின் ரத்த அணுக்களின் வடிவம் ‘அரிவாள்’ போல் வளைவதால், உடற்பகுதிக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இவ்வகை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கடும் வலியால் துடிப்பதோடு, பக்கவாதம், காலில் அல்சர், எலும்புகளில் அழுத்தம் உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக சிக்கில் செல் நோய் பாதித்த பெற்றோர்கள் மூலம் குழந்தைகளுக்கும் நோய் தொற்றுவதால், தலைமுறை தலைமுறையாக நோய் பரிமாற்றமாகிறது.

இந்தநிலையில், இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, நைஜீரியாவில் துணையை தேடுவோர், தங்களது இணையின் விருப்பமான நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடாமல், முதல் கேள்வியாக இதனை கேட்டு தெளிவுப்படுத்தி கொள்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!