நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு 16 பேர் பலி!

நேபாளம் நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் 16 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பல ஊர்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை அன்று ஒரேநாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

மழை காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கோட்டாங், போஜ்பூர் மற்றும் முல்பானி பகுதியை சேர்ந்தவர்கள். மழை காரணமாக நாட்டின் பல தேசிய நெடுச்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!