ஐதேகவுக்கு சிங்கள வாக்குகள் கிடைக்காது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த நிலையில் சிங்கள மக்களின் பெரும்பான்மை விருப்பு இனி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது. சிங்கள பெரும்பான்மையினரின் கருத்துக்கள் பிற்போடப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை தோற்கடித்து இவ்விரு தரப்பினரும் இடைப்பட்ட காலத்தில் தமது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வுள்ளனர். பாராளுமன்ற நம்பிக்கையினை வெற்றிக் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒருபோதும் இனி மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறாது என அவர் இதன் போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!