(Photo by Kevin Lee/Bloomberg News)
பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.
இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!