கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்! – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடகாவில் ஒரு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட மற்றொரு பேருந்தில் இருந்த குழந்தையும், பள்ளி தொழிலாளி ஒருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. பன்னர்ஹட்டா என்ற இடத்தில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குழந்தைகளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவு ஒன்றில் திரும்பும்போது பக்கவாட்டில் வந்த மற்றொரு பேருந்து மோதியதில் ரயான் பள்ளிப் பேருந்து தூக்கி வீசப்பட்டது.

இந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தையும், பள்ளியில் பணியாற்றும் பெண் தொழிலாளி ஒருவரும் பேருந்தினுள்ளேயே தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அவர்கள் எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 7ம் தேதி நடந்த இந்த விபத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!