‘நெல்சன் மண்டேலா என்னை அரசியலில் ஈடுபட சொன்னார்’ – பிரியங்கா காந்தி தகவல்!

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், மண்டேலாவுடன் எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பிரியங்கா கூறியிருப்பதாவது:- நெல்சன் மண்டேலா போன்ற மனிதர்களை உலகம் இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை, உண்மைக்கும், அன்புக்கும், விடுதலைக்கும் அத்தாட்சியாக உள்ளது.

எனக்கு அவர் ‘அங்கிள் நெல்சன்’ ஆவார். நான் அரசியலில் இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதற்கு முன்பே சொன்னவர், மண்டேலா. அவர் எனது உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் எப்போதும் இருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!