டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடி விளக்கமளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்!

அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி ஜப்பான் நகரான ஒசாகாவில் சந்தித்து பேசிய போது, இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க உதவும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில் மோடி அப்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பலவீனமான வெளியுறவு அமைச்சக மறுப்பு மட்டும் போதாது. பிரதமர் மோடியே நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரியுள்ளார். 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தை மோடி மீறியதன் மூலம் இந்தியாவின் நலன்களில் சமரசம் செய்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தின் மக்களவையில் இப்பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.இப்பிரச்சினையில் மோடி மௌனமாக இருப்பது ஏன் என்றும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜித்வாலா கேள்வி எழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!