உலகக் கிண்ணத்தை வென்றது போல் உணர்கின்றேன்- இம்ரான் கான்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு தாய்நாடு திரும்பிய பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பையடுத்து தான் உலகக் கிண்ணத்தை வெற்றதைப்போன்று உள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விஜயத்தை நிறைவு செய்த பின்னர் நேற்று தாய்நாடு திரும்பினார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பால் பூரிப்படைந்த இம்ரான் கான், நீங்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்தபோது, நான் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து வந்தது போல தெரியவில்லை. மாறாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிவிட்டு தாய்நாடு திரும்பிய உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!