நடிகையுடன் ரகசிய வாழ்க்கை: – கர்நாடக முதல்வராகப் போகும் குமாரசாமி பற்றிய தகவல்கள்

ஆட்சி அமைப்பது குறித்து குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தரப்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் காலஅவகாசம் கொடுத்துள்ளார்.முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகன் ஜனதா தள கட்சி தலைவர் எச்டி குமாரசாமி தான் கர்நாடக முதல்வர் வேட்பாளர்களில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவார்.

2013-ம் ஆண்டுத் தேர்தலில் நின்ற போது 16 கோடியாக இருந்த குமாரசாமியின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டு 43 கோடியாக உயர்ந்து இருந்தது. குமாரசாமி மனைவி பெயரில் 2013-ம் ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்த போது இவரது சொத்து மதிப்பு 124 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. நடிகையுடன் ரகசிய வாழ்கை நடிகர் குமாரசாமி மகள் வயது நடிகையான குட்டி ராதிகாவுடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக 2008 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின.

குமாரசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி அனிதா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் தான், குட்டி ராதிகா மீது இவர் காதல் வயப்பட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் 2 ஆண்டுகள் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தனர் என கூறப்பட்டது. இருவரும் பொது இடங்களில் சுற்றத்திரிந்ததாகவும், குமாரசாமியின் கட்டுப்பாட்டில் ராதிகா இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இவற்றை இருவரும் மறுத்து வந்தனர். அப்போது குட்டி ராதிகாவின் வயது 27 ஆகும்.

ஆனால், 58 வயதில் இருக்கும் குமாரசாமி மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் எனவும் கூறப்பட்டது. சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார் ராதிகா. நான்கு ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த இவர் 2012 ஆம் ஆண்டு தனது மகள் மற்றும் குமாரசாமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், குமாரசாமிக்கும் தனக்கும் உறவு இருந்தது உண்மை என்றும், திருமணம் முடிந்த பின்னர் லண்டன் சென்றுவிட்டதாகவும் தனது குழந்தையின் பெயர் ஷமிகா எனவும் தெரிவித்தார்.

கர்நாடக அரசியலில் ஏற்கனவே பின்தங்கியிருந்த குமாரசாமியின் இந்த ரகசிய வாழ்க்கை அப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் இவரது ஜனதா தள கட்சி 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், இவரே கர்நாடகாவின் முதல்வராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!