கேரள வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டதற்கு பணம் கேட்ட இந்திய விமானப்படை!

கேரளாவில் கடந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதற்காக இந்திய விமானப்படை கேட்கும் தொகையை தள்ளுபடி செய்யவேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தி உள்ளார்.

மேலும் 2017ம் ஆண்டு ஒக்கி புயல் மற்றும் 2018ம் ஆண்டு வெள்ளப்பெருக்கினால் கேரளா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரனராயி விஜயன், சீரமைப்பு பணிகளுக்காக 31 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டிருந்ததாகவும், ஆனால் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மீட்புப் பணிக்காக விமானப்படை கேட்டுள்ள 114 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!