“உங்கள் இரத்தத்தால் இந்த மைதானம் நிரம்பும்” : ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய மிரட்டல்

ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் சில சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் மாதம் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளன.

இப் போட்டிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலேயே புதிய சுவரொட்டிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த சுவரொட்டிகளில் உலக புகழ் பெற்ற வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரது தலைகள் அறுக்கப்படுவது போன்ற படங்கள் காணப்படுகின்றன.

மேலும் அச் சவரொட்டிகளில் “உங்கள் ரத்தத்தால் இந்த மைதானம் நிரம்பும்” என்றும் மற்றொருபடத்தில் “வெற்றி எங்களுடையது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!