இந்திய – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் பாங்கொக்கில் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்று வரும், ஆசியான் அமைப்பின் 26 ஆவது பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், நேற்று பக்க நிகழ்வாக இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த இருதரப்பு பேச்சுக்களில், தீவிரவாதத்துக்கு எதிரான போர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.

இதன் போது, தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு இந்தியாவின் பலமான ஆதரவு சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், முக்கியமான அண்டை நாடும், பெறுமதிமிக்க நண்பனுமான சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பின் போது, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் எமது பலமான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!