அமெரிக்காவுடன் உடன்பாடுகள் – பசில் எதிர்ப்பு

அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைந்தால், அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகள் தொடர்பான நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு. இதுகுறித்து மக்களைத் தீர்மானிக்க விடுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், கோத்தாபய ராஜபக்ச அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தாமே அதிகம் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!