கோத்தபாய மீதான அச்சமே இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்திற்கு காரணம் – சரத் வீரசேகர

எதிர்தரப்பினர் மீண்டும் மீண்டும் கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் பேசுவதற்கு கோத்தபாய தேர்தலில் களமிறங்குவது குறித்து அவர்கள் அச்சமடைந்திருப்பதே காரணம் என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டிருப்பது அவரது தனிப்பட்ட சில தேவைகளை இலகுபடுத்துவதற்காகவே அன்றி, நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்காக அல்ல. அமெரிக்கப் பிரஜாவுரிமையை அவர் கொண்டிருப்பதால் நாட்டை நேசிக்கவில்லை என்றும் கூறமுடியாது.

மேலும் அவர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்தரப்பினர் மீண்டும் மீண்டும் கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பிலேயே பேசுகின்றார்கள் என்றால், கோத்தபாய தேர்தலில் களமிறங்குவது குறித்து அவர்கள் அச்சமடைந்திருப்பது தெளிவாகின்றது என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!