தலை கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: புதிய நடைமுறை இன்று முதல் அமல்!

ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாது என பெங்களூரில் பெட்ரோல் நிலையங்கள் அறிவித்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெங்களூரில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.இதற்கு ஹெல்மட் அணியாதது முக்கிய காரணமாக போலீசார் கூறுகின்றனர்.

ஹெல்மட் விவகாரத்தில் நீதிமன்றங்களும் கடுமை காட்டிவருகின்றன. இந்நிலையில், காவல்துறையினர் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பே திடீரென முன்னறிவிப்பின்றி பெட்ரோல் தர மறுத்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!