சேலம் மாவட்டத்தில் சாரல் மழை- ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி

சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவி வருகிறது.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, கோரிமேடு, 4 ரோடு, ஜங்சன், செவ்வாய்ப்பேட்டை உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையை அடுத்து மாநகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

ஏற்காட்டில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகலில் சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எறிய விட்ட படியே சென்றன.

ஏற்காடு மலையில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் வீட்டில் முடங்கினர். சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறையில் முடங்கினர். இதனால் அண்ணா பூங்கா, படகுகுழாம், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் என அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவி வருகிறது.

மாவட்டத்தில அதிக பட்சமாக ஏற்காட்டில் 8.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலத்தில் 3.2, ஆத்தூர், தம்மம்பட்டியில் 2.2, சங்ககிரி, ஆனைமடுவில் 2, மேட்டூர், காடையாம்பட்டி 1.8, வாழப்பாடி, ஓமலூரில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!