இந்திய அரசாங்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டார் இம்ரான்கான்

இந்திய அரசாங்கத்தை ஜேர்மனியின் நாஜிகளுடன் ஒப்பிட்டுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஸ்மீர் குறித்து உலகநாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது ஹிட்லரை திருப்திப்படுத்துவது போல ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

காஸ்மீரின் இனப்பரம்பலை இனச்சுத்திரிகரிப்பு மூலம் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள இம்ரான்கான் ஹிட்லர் விடயத்தில் வேடிக்கை பார்த்ததை போல உலகநாடுகள் இந்த விடயத்திலும் வேடிக்கை பார்க்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து மேலாதிக்கவாத கொள்கை நாஜிகளின் மேலாதிக்கவாத கொள்கை போல ஒருபோதும் முடிவுறாது என தெரிவித்துள்ள அவர் இது இறுதியில் இந்தியாவில் முஸ்லீம்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதற்கு வழிவகுத்து பாக்கிஸ்தானிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இம்ரான்கான் பல உலகதலைவர்களை தொடர்புகொண்டுவருகின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!