சிறிலங்கா இராணுவத் தளபதியானார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று ஓய்வுபெற்ற நிலையில், இன்று 23 ஆவது இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை, நடந்த நிகழ்வில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான நியமனக் கடித்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை இழைத்தார் என ஐ,நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால், குற்றம்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில், அவர் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!