புதிய அரசியலமைப்பின் முதல் வரைவு வியாழன்று வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படுகிறது

புதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழு உறுப்பினர்களில் ஒருவருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழுவின் நாளை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அடுத்து இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு, வழிநடத்தல் குழுவிடம் வழங்கப்படும்.

இது இறுதியான வரைவு அல்ல. ஏனென்றால், நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை மற்றும் தேர்தல் முறை உள்ளிட்ட சில விடயப் பரப்புகளில் இன்னமும் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!