அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அவசரத்தை வலியுறுத்துகின்றது!

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டிருப்பதானது, சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அவசியத்தினை உடனடியாக வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருந்த DIRTY DOZEN – Genocidaires – War Criminals எனும் சிறிலங்காவின் தமிழினஅழிப்பாளர்களின் முதற்தொகுதி 12 பேரில் இனப்படுகொலையளராக அடையாளம் காணப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சர்வதேச நாடுகளாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் ஓர் போர் குற்றவாளியாக அடையாளங்காட்டப்பட்டுள்ளார்.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மேற்கொண்டிருந்த புலனாய்வுகளிலும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா ஓரு குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் தொடர்பில் ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என பல சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் தமது கண்டனங்களையும் கவலையும் வெளிப்படுத்தி வருகின்றன.

இவரது நியமனம் என்பது பொறுப்புக்கூறல், நீதிப்பொறிமுறை என்பனவற்றில் இருந்து சிறிலங்கா அரசு தவறிவருகின்ற என்பதோடு, அது ஒரு இனநாயக அரசென்பதனை வெளிப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அவசியத்தினையே இவரது நியமனம் உடனடியாக வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!