கொழும்பு குப்பைகளால் அருவக்காலில் எந்த ஆபத்தும் ஏற்படாது ; சம்பிக்க

கொழும்பின் கழிவுகளை அருவக்காலு கழிவு மீள்சூழற்சி நிலையத்துக்கு எடுத்து செல்வதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.

குப்பைகள் முறையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தியே மீள் சுழற்சி செயப்படுகினறன. மக்கள் பயப்படுவது போன்று கொழும்பு கழிவுகளால் எந்த ஆபத்தும் ஏற்பட போவதும் இல்லை.

அதற்கு இடமளிக்க போவதும் இல்லை என்று மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யூனியன் பிரதேசம் – புறக்கோட்டை வரையிலான பயணிகளுக்கான பேரைவாவி படகு போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

கொழும்பு நகரத்துடன் ஏனைய நகரங்களை இணைக்கும் புதிய வீதி கட்டமைப்புக்களின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் வருடங்களின் அந்த வீதி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!